Wednesday, March 3, 2010

வலைப்பதிவில் பேபால் நன்கொடைப் பட்டனை இணைப்பது எப்படி?

வலைப்பதியும் தமிழ் வலைப்பதிவர்களுக்கு வலைப்பதிவின் ஊடாக வருமானம் ஈட்டுவதற்கான வழிகள் எதுவும் சாதகமாக இல்லை. கூகிள் எப்சன்ஸ் விளம்பரங்களும் தமிழ் வலைப்பதிவர்களுக்கு கைகொடுப்பதாக இல்லை.

தமிழ் கூறும் நல்லுலகம் நலம் பெறவேண்டும் எனும் நன்நோக்கில், எவ்வித இலாபமும் இன்றி, இணையத்தில் தன்னார்வப் பணியாக, பல அளப்பரிய பணிகளைச் செய்து வருவோர் இருக்கின்றனர். இன்றைய பொருளாதார நெருக்கடி மிக்க உலகில், அவர்களுக்கு சிறிதேனும் ஒரு தொகை நன்கொடையாக கிடைக்கப்படுமானால், அவர்களது பணி மேலும் ஊக்கத்திறனுடன் மேலோங்கும்.

உங்கள் இணைய சேவை அல்லது நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் வழங்கும் தகவல்கள் பலருக்கும் பயன்மிக்கதாக இருந்தால், உங்கள் பணியை ஊக்குவிக்கும் முகமாக, ஒரு தொகையை நன்கொடையாக வழங்கி, உங்களை மேலும் ஊக்குவிக்க வேண்டும் என எண்ணும் தயாள குணவாலர்கள் எம்மில் இருக்கவே செய்வர்.

அதற்கு நீங்கள் உங்கள் வலைத்தளத்தின் வருகையாளர்கள் நன்கொடை அளிப்பதற்கான வசதியை செய்திருக்க வேண்டும். அதை எப்படி செய்வது? அதற்கானதே இவ்விடுகை. இந்த வசதியை பேபால் தளம் வழங்குகிறது. முதலி பேபால் நன்கொடை பட்டனை உங்கள் வலைத்தளத்தில் தோன்றச் செய்ய வேண்டும். வலைத்தளத்தின் தோன்றும் பேபால் நன்கொடை பட்டனை சொடுக்கி, பேபால் இணைய பணமாற்று வசதியூடாக நன்கொடை அளிக்க விரும்புவோர் வழங்கமுடியும். அதற்கு நன்கொடை பெறுவோர் (வலைப்பதிவர்) பேபால் இணையத்தளத்தில் ஒரு கணக்கு வைத்திருக்க வேண்டும்.

இதுவரை பேபால் கணக்கு இல்லாதவர்கள், இங்கே Sign Up Todayசென்று ஒரு கணக்கை திறந்துக்கொள்ளலாம். கணக்கு ஒன்றை திறப்பதற்கு எந்த கட்டணமும் அறவிடப்படுவதில்லை. கணக்கு திறத்தல் இலவசமாகும்.

இனி பேபால் நன்கொடை பட்டனை எப்படி உங்கள் வலைத்தளத்தில் தோன்றச் செய்வது எனும் வழிமுறைகளைப் பார்ப்போம்.

வழிமுறைகள்

1. முதலில் உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை இட்டு புகுபதிகை Log in செய்துக்கொள்ளுங்கள்.


2. "Merchant Services" எனும் தேர்வில் சொடுக்குங்கள் (கீழுள்ள படத்தைப் பார்க்கவும்.)


3. "Merchant Services" எனும் தேர்வை சொடுக்கிய உடன் தோன்றும் சாளரத்தை அப்படியே கீழ்நோக்கி இழுத்தால் வலப்பக்கம் "நன்கொடை" (Donations) எனும் தேர்வை காண்பீர்கள். அதனை சொடுக்குங்கள். (கீழுள்ள படத்தைப் பார்க்கவும்.)


4. அதை சொடுக்கியவுடன் மேலும் பல தேர்வுகளைக் (Options) காண்பீர்கள், அப்படியே சற்று கீழே இழுங்கள். அதில் "ஒரு பட்டனை உருவாக்கு" (Create a button now) எனக் காணப்படும் தேர்வை சொடுக்குங்கள்.


5. அங்கே உங்களுக்கு ஒரு எச்டிஎம் எல் நிரல் துண்டு கிடைக்கும். அதனை நகலெடுத்து உங்கள் வலைத்தள வார்ப்புருவில் (Blogger Dashboard > Layout > Add a Page Element > html/Javascript) விரும்பும் இடத்தில் ஒட்டி, சேமித்துக்கொள்ள வேண்டியதுதான். கீழுள்ளவாறு தோற்றமளிக்கும்.


இனி உங்கள் வலைப்பதிவின் இடுகைகள் பயனுள்ளது என கருதுவோர், உங்களின் உழைப்பை மேலும் ஊக்கவிக்க விரும்புவோர், தங்கள் விரும்பும் ஒரு தொகையை, நன்கொடையாக அளித்துச்செல்ல முடியும். அந்த நன்கொடையை நீங்கள் (வலைப்பதிவர்) உங்கள் பேபால் கணக்கின் ஊடாகப் பெற்றுக்கொள்ளலாம்.


நன்றி!

அன்புடன்
அருண் HK Arun

Download As PDF