உங்கள் வலைப்பதிவிற்கு வருகைத் தருவோர்; உங்கள் வலைப்பதிவை புத்தகக்குறியாக இட்டு வைத்துக் கொள்வதற்கான வசதி, இடுகைகளை அச்சுப் பதித்துப் பெற்றுக் கொள்வதற்கான வசதி, மின்னஞ்சல் ஊடாகப் பலரிடம் பகிர்ந்துக்கொள்வதற்கான வசதி, இன்னும் இன்னும் டிவிட்டர், பேஸ்புக், போன்ற பலதளங்களில் பகிரவும் என பல்வேறு வசதிகளை இலவசமாக செய்து தருகிறது ஒரு தளம். இதனால் எமது தளத்தின் வருகையாளர் எண்ணிக்கையைப் பெருக்கிக்கொள்ளவும் முடியும். ஆம்! இத்தனையும் ஒரு சிறிய பட்டன் ஊடாகக் கிடைக்கப்பெறும் அரிய வசதிகள்.
இதோ இத்தளத்தின் முகவரி: http://www.addthis.com/
இப்பட்டனை எவ்வாறு எமது இடுகைகளில் தோன்றச் செய்வது, என அறிந்துக்கொள்ள விரும்புவோர், முதலில் Get Your Button எனும் இத்தேர்வை சொடுக்கி தளத்திற்குச் செல்லுங்கள்.
1. இணையத்தளம், வேர்ட் பிரஸ், ப்ளொக்கர் எனும் (Select your service) தேர்வுகளில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்துக்கொள்ளுங்கள்.
2. நீங்கள் விரும்பும் வடிவத்தை (Select a button style) தேர்வு செய்யுங்கள். மேலதிக தேர்வுகளும் (More Option) உள்ளன. நீங்கள் விரும்பினால் (Customize your button) எனும் தேர்வை சொடுக்கி தனித்துவமான வடிவிலும் பெற்றுக்கொள்ளலாம்.
3. Get the Code எனும் தேர்வு பட்டனை அழுத்தி நிரல் துண்டை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
எப்படி இணைப்பது?
1. உங்கள் வலைப்பதிவை திறந்து, (Layout) வார்ப்புருவில், Edit HTML எனும் தேர்வை சொடுக்குங்கள்.![]()
2. "Expand Widget Templates" என இடப்பட்டிருக்கு சிறிய பெட்டிக்குள் ஒரு சொடுக்கிடுங்கள்.![]()
3. இனி div class='pst-footer' என இடப்பட்டிருக்கும் இடத்தை தேடிப்பிடித்து, அதற்கு கீழ் நிரல் துண்டை ஒட்டிவிட வேண்டியதுதான். (கீழுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளதை கவனிக்கவும்.)![]()
4. என்ன ஒட்டி விட்டீர்களா? இனி தளத்தை (Save) சேமித்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான். (எனது தளத்தின் அடியில் காட்சியளிப்பதைப் பார்க்கவும்.)
இனி உங்கள் தளத்திற்கு வருவோர் மேலுள்ள வசதிகளை எளிதாகப் பெற்றுக்கொள்வர்.
இதன் விபரங்களை இக்காணொளி ஊடாகவும் அறிந்துக் கொள்ளலாம்.
இன்னுமொரு வசதி
ஒரே சொடுக்கில் 233 தளங்களூடாக உங்கள் இடுகைகளின் RSS ஓடையை பகிர்ந்தளிக்கும் வசதியையும் இத்தளம் வழங்குகின்றது. அதற்கு உங்கள் தளத்தின் RSS ஓடை முகவரியை இங்கே இட்டு அதற்கான நிரல் துண்டை பெற்று உங்கள் தளத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வசதியை அமெரிக்க வெள்ளை மாளிகையின் அதிகாரப் பூர்வ தளம் முதல், உலகில் பிரசித்திப்பெற்ற முன்னனி தளங்கள் எல்லாம் பயன்படுத்துகின்றன. அத்தளங்களின் பட்டியலையும் நீங்கள் பார்வையிடலாம். பலத்தளங்கள் தனித்துவமான வடிவமைப்புடன் தங்கள் தளங்களில் இணைத்துள்ளன. சில தளங்களில் "Flash Effect" வடிவிலும் வடிவமைத்து இட்டுள்ளதைக் காணக்கிடைக்கிறது. உங்களால் முடிந்தால் நீங்களும் அவ்வாறு வடிவமைத்து பொதித்துக்கொள்ளலாம். சில மூன்றாம் தளங்கள் அவ்வாறு தனித்துவமான வடிவமைப்புடன் செய்துக்கொள்ளவும் உதவுகின்றன.
குறிப்பு:
இவ்வசதியினை பயன்படுத்தும் பதிவர்கள் சிலர் இருப்பினும், மேலும் பலரது பயன்பாட்டிற்கு கொண்டு செல்லும் முகமானதே இவ்விடுகை.
நன்றி
அருண் HK Arun
Wednesday, February 17, 2010
உங்கள் தளத்திற்கான அரிய வசதிகள்
Posted by
HK Arun
at
12:03 PM
4
comments
பகுப்புகள் இணையம், பயனுள்ளத் தளங்கள்
Wednesday, February 10, 2010
எந்தவொரு வலைப்பதிவையும் பிடிஎப் கோப்பாக பதிவிறக்கி பயன்படுத்தும் வசதி
எமது ஆங்கிலம் வலைத்தளத்தில் "பாடங்களை பிடிஎப் கோப்புகளாகப் பதிவிறக்கி பயன்படுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது" எனும் செய்தியை அன்மையில் வெளியிட்டிருந்தேன். அவ்வசதியினை என்னைப்போல் பலரும் தங்கள் தங்கள் வலைப்பதிவுகள் ஊடாக வழங்கியிருப்பீர்கள். அதன் பயனால் வருகையாளர்கள் எளிதாக தாம் விரும்பும் எந்தவொரு இடுகையையும் பதிவிறக்கி பயன்படுத்துவர்.
ஆனால் அவ்வாறான வசதியை அளிக்காத எத்தனையோ எண்ணற்ற சிறப்பான வலைப்பதிவுகள், இணையத்தளங்கள் இணையக் கடலில் குவிந்து கிடக்கின்றனவே! அவற்றை பதிவிறக்கி பயன்படுத்தவது எப்படி? அவற்றை எமது கணனிகளில் PDF கோப்புகளாக பதிவிறக்கி பயன்படுத்த முடியுமானால், எவ்வளவு எளிதாக இருக்கும்?
அதற்கான வசதியை PDF my URL தளம் அளிக்கிறது.
நாம் விரும்பும் இடுகையின் URL முகவரியை இட்டு பதிவிறக்குவதற்கான அடையாள படத்தை சொடுக்கியுடன், அடுத்த செக்கன்களின் நமக்குத் தேவையான இடுகை, பிடிஎப் கோப்பு வடிவமாக நமது கணனிகளில் சேமிக்கப்பட்டுவிடுகிறது.
மேலதிகத் தேர்வுகள்
Advanced Options எனும் மேலதிகத் தேர்வுகள் சுட்டியை சொடுக்கி மேலும் உங்கள் வலைப்பதிவில் இதனை பயன்படுத்தும் வசதிகளை செய்துக்கொள்ளலாம்.
தள முகவரி: http://pdfmyurl.com/
குறிப்பு:
இந்த வலைத்தளத்தில் 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு இன்று தான் எழுதுகிறேன். எழுதாமல் விடுப்பட்டு போனமைக்கு காரணங்கள் இரண்டு உள்ளன. முதல் காரணம்; அதிகமான வலைப்பதிவுகளை தொடர்ந்து எழுதி பராமரிக்க முடியாமை. இரண்டாவது காரணம்; என்னைவிட சிறப்பாக கணனி தொழில் நுட்பத் தகவல்களை எழுதிவரும் முன்னோடி பிகேபி, அனைவரதும் அன்புக்கு இலக்கான நெஞ்சம் தமிழ்நெஞ்சம் போன்றொரின் எழுத்துக்கள். தற்போது இந்த வரிசையில் போட்டோ சொப் சிறப்பாளர் வேலன், அன்மையில் கலக்கும் tvs50 போன்று இன்னும் பலர் சிறப்பாக எழுதிவருகின்றனர். இவ்வனைவரும் வழங்கும் தொழில் நுட்பத் தகவல்களால்; தமிழ் கணனி உலகம் மேலும் வளர்ச்சி பாதை நோக்கி செல்கின்றது என்பது மகிழ்வான செய்தி.
நன்றி
அன்புடன்
அருண் HK Arun
Posted by
HK Arun
at
11:27 PM
0
comments
பகுப்புகள் PDF கோப்புகள், இணையம், கணனி சிறு தகவல்கள்


