Monday, December 24, 2007

கூகிளின் இணைய மொழிமாற்றி [CLIR]

இன்று எத்தனையோ விதமான அறிவியல் நுட்பத் தகவல்களும், கணனிசார் பதிவுகளும், எண்ணற்றக் கற்கை நெறிகளும் இணையத்தில் குவிந்துக் கிடக்கின்றன. ஆனால் இவைகள் அதிகமாக ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. ஆங்கில அறிவு அற்றவர்களுக்கோ அவற்றின் முழுமையான பயனை பெறமுடியாமல் இருக்கின்றது. ஏன் தமிழர்களது நம்பகமான ஆங்கில இணையதளம் தமிழ்நெட் கூட பார்க்க முடிவதில்லை என்ற கவலை பலருக்கு இருக்கிறது.

உதாரணமாக "தமிழ்நெட்" இணையத்தளத்தின் இணைய முகவரியை (www.tamilnet.com) இட்டால் அத்தளம் தமிழில் காட்சி தருகிறது என வைத்துக்கொள்வோம் எப்படியிருக்கும்...? ஆம்! ஆங்கிலமே அவசியமில்லாமல் போய்விடும். அனைத்து ஆங்கிலத் தளங்களையும் தமிழிலேயே மொழிமாற்றி வாசித்துவிடலாம். ஆங்கிலம் அல்லாத உலக மொழிகள் அனைத்தையுமே தமிழில் மொழிமாற்றி வாசித்துவிடலாம்.

என்ன நினைக்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறதா?

ஆம்! அப்படியான ஓர் வசதியை விரைவில் Google ஏற்படுத்தித் தரப்போகிறதாம்.

Cross – Language Information Retrieval [CLIR] எனப்படும் கூகிளின் இணைய மொழிமாற்று வசதியை, கூகிள் நிறுவனம் கடந்த 2007 மே மாதம் அறிமுகப்படுத்தியது. அதன் ஆரம்பக் கட்டமாக தற்போது ஆங்கிலத்துடன் 12 மொழிகளை மொழிமாற்றும் வசதியை கூகிள் ஏற்படுத்தியுள்ளது. தமிழுக்கும் இந்த வசதி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது நாம் எழுதிய ஒரு பகுதியை அல்லது நாம் வாசித்து அறிய விரும்பும் ஒரு பகுதியை Copy Paste செய்து, எந்த மொழியிலிருந்து, எந்த மொழிக்கு என்று தெர்வுசெய்து, "Translate" எனும் சுட்டியை அழுத்தி, நாம் விரும்பும் மொழியில் வாசித்துக்கொள்ளலாம்.

Translate a Web Page எனும் தேர்வூடாக ஓர் இணையத்தள முகவரியை இட்டு, அந்த இணையத்தளத்தின் அனைத்து உள்ளடக்கங்களையும் இன்னுமொரு மொழியில் மொழிமாற்றம் செய்து பார்க்கவும் முடியும்.

நான் ஒரு சீன மொழி இணையத்தள முகவரியை இட்டு Chinese to English என தேர்வு செய்து பரீட்ச்சார்த்துப் பார்த்தேன். என்ன ஆச்சரியம்! சீன மொழியில் தென்பட்ட இணையத்தளம் ஆங்கிலத்தில் அருமையாக காட்சியளிக்கிறது.

இதுதான் அந்த சீன இணையத்தளம். (மொழிமாற்றும் முன்)


மொழிமாற்றிய பின், ஆங்கிலத்தில் இவ்வாறு காட்சியளிக்கிறது.


என்ன தமிழுக்கும் இவ்வாய்ப்பு கிடைத்தால் ஒரு கை பார்த்துவிடாலாம் என்கிறீர்களா!

அது சரி! அவ்வாய்ப்பை கூகிள் விரைவில் வழங்கும் என்று கூகிள் ஆண்டவரை வேண்டிக்கொள்வோம். அதுவரை பிற மொழிகளை மொழிமாற்றி பார்ப்போம் வாருங்கள்.

http://translate.google.com/translate_t


நன்றி

அன்புடன் அருண்

Download As PDF

Monday, December 17, 2007

மாற்று வழியில் மின்னஞ்சல் அனுப்புவோமா?

நீங்கள் வழமையாக உங்கள் மின்னஞ்சல் சேவையை பயன்படுத்துவதற்கு; உங்கள் பயனர் பெயர், கடவுச் சொல் போன்றவற்றை இட்டு உங்கள் மின்னஞ்சலை திறந்து அதன் பின்பே அவசியமானவர்க்கு மின்னஞ்சல் அனுப்புவீர்கள். ஆனால் அவ்வாறு இல்லாமல் வேறு ஒரு வழியிலும் மின்னஞ்சல் அனுப்ப முடியும்.

வித்தியாசமாக அதுவும் ஆங்கில கூட்டெழுத்துக்களில். எப்படி என்று முயன்று பாருங்கோவன். அதுவும் இத்தளத்தில் இருந்தே அனுப்பலாம்.

கீழே இணைக்கப்பட்டிருக்கும் படத்தைப் பாருங்கள். உண்மையில் அது படமல்ல. அதுதான் மாற்றுவழி மின்னஞ்சல். அதன்மேல் சொடுக்கியை வைத்து சுட்டி தட்டச்சிடலாம்.

எப்படி?

To: - சென்றடைய வேண்டியவரின் மின்னஞ்சல் முகவரியை இடுங்கள்

From: - அனுப்புவரின் மின்னஞ்சல் முகவரியை (உங்கள்) இடுங்கள்

Name: - அனுப்புவரின் பெயர்

Subject: - நீங்கள் எழுதப்போகும் விசயத்தின் தலைப்பு

Message: - நீங்கள் எழுதவேண்டியத் தகவலை எழுவதற்கான இடம்.

இனி தகவலை எழுதி முடிந்தவுடன் "Send" எனக் காணப்படும் இடத்தில் ஒரு சொடுக்கு போடுங்கள் அவ்வளவு தான்.

மின்னஞ்சல் உரியவருக்குச் சென்றடைந்து விடும்.



குறிப்பு:

"From" எனும் இடத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை இடாமல், வேறு ஒருவரின் முகவரியை இட்டும் அனுப்பலாம். வேண்டுமானால் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரியைக் கூட இடலாம். மின்னஞ்சலை பெற்றவர் குழம்பிப்போய்விடவும் வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் குழப்பத்தை தவிர்ப்பதற்கு உங்கள் மின்னஞ்சலை மட்டும் பயன்படுத்தி அனுப்புங்கள்.

இனிமையான மாற்று வழி மின்னஞ்சல் அனுப்புதலுக்கு வாழ்த்துக்கள்!

நன்றி

அன்புடன் அருண்
HK Arun

Download As PDF

Wednesday, December 12, 2007

எம் எஸ் வேர்டில் தேடல் (Quick Search Box)

எம் எஸ் வேர்டில் வேலை செய்துக்கொண்டிருக்கும் பொழுது உடனடியாக ஒரு சொல்லைப் பற்றியோ, விடயத்தைப் பற்றியோ தேடுதல் செய்யவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அப்போது நாம் வேலை செய்துக்கொண்டிருக்கும் எம் எஸ் வேர்ட்டிலேயே கூகிள் தேடலை தொடர முடியும்.

எப்படி என்று பார்ப்போமா?

மிக இலகுவானது கொண்ட்ரோல் Ctrl கீயை இரண்டு முறை தட்டுங்கள். [Quick Search Box] மேலே காட்டப்பட்டவாறு தோன்றும். பிறகு என்ன அதனூடாகவே கூகிள் தேடல்களைத் தொடர வேண்டியதுதான்.


மீண்டும் Ctrl இரண்டு முறைத் தட்டினால் கூகிள் தேடு இயந்திரம் மறைந்துவிடும்.

குறிப்பு:

உங்கள் கணனி இணையத்துடன் இணைக்க்கப் பட்டிருக்க வேண்டும்.

Download As PDF

Wednesday, December 5, 2007

உலகக் கடிகாரத்தின் ஓட்டம்

உலகில் மக்கள் அதிகரிப்பால், பல நாடுகள் குடும்பக் கட்டுப்பாடு குறித்த சட்டத்திட்டங்களையும் நடவடிக்கைகளையும் விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்த மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் எப்படி என்று அறிந்துக்கொள்ள வேண்டுமா? இந்த நிமிடத்தில் உலக மக்கள் தொகை எவ்வளவு? எவ்வளவு விகிதத்தில் அதிகரித்து செல்கிறது? போன்ற விபரங்களை கீழுள்ள உலகக் கடிகாரத்தில் Now என்பதை சொடுக்கி அறிந்துக்கொள்ளலாம்.

அத்துடன் ஒரு மணித்தியாளத்தில், ஒரு நாளில், ஒரு வாரத்தில், ஒரு மாதத்தில், ஒரு ஆண்டில் என வட்ட வடிவில் காணப்படும் பட்டன்களை சொடுக்கி அறிந்துக்கொள்ளலாம்.

பாருங்கள் உலகக் கடிகாரம், கைக்கடிகாரத்தையும் விட வேகமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது!


எதிர்கால மக்கள் தொகை இன்னும் ஒரு ஆண்டில் எப்படி இருக்கும், இன்னும் பத்து ஆண்டுகளில் எப்படி இருக்கும் என ஆண்டுகளை கூட்டி, கழித்து அறிந்துக்கொள்ளலாம். இது ஒரு மக்கள் தொகை எதிர்வுக்கூறல் விபரக் கணிப்பு. மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் சொடுக்கி அறிந்துக்கொள்ளுங்கள்



மேலுள்ள கடிகாரம் போன்றே இந்த நொடியில், ஒரு மணித்தியாளத்தில், ஒரு நாளில், ஒரு வாரத்தில், ஒரு மாதத்தில், ஒரு ஆண்டில் உணவாகப் பெறப்படும் அளவின் கடிகாரம் இது.




நன்றி

அன்புடன்
அருண் HK Arun

Download As PDF

Monday, December 3, 2007

கூகிள் ஏர்த் [Google Earth]

இணைய உலகில் கூகிள் ஏர்த் பற்றி பேசாதவர்களே இல்லை எனலாம். ஆனாலும் இதுப் பற்றி தெரியாதவர்களும் இருக்கிறார்கள் என்பதால் இந்த இடுகை.

இந்த கூகிள் ஏர்த் [Google Earth] எனும் மென்பொருளானது; முன்பு "ஏர்த் வியூவர்" [Earth Viewer] என்ற பெயரில் கீஹோல் [KEYHOLE] எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இதை 2004 ம் ஆண்டு கூகிள் நிறுவனம் வேண்டி "கூகிள் ஏர்த்" எனும் பெயரில் வெளியிட்டது. இது செய்மதியூடாக உலகில் நாம் விரும்பும் எந்த ஒரு இடத்தையும் துள்ளியமாகப் பார்ப்பதற்கு உதவுகிறது. வீதிகள், கட்டிடங்கள், தெருக்கள் போன்றவை மட்டுமன்றி, வாகனங்கள், வீடுகள், மரங்கள் கூட சில இடங்களில் தெளிவாகத் தெரிகின்றன.

கொழும்பு காலிமுகத்திடலின் ஒரு பகுதியே மேலே காட்டப்பட்டுள்ளது.

இந்த கூகிள் ஏர்த்தில் மூன்று பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

1. கூகிள் ஏர்த் புரொபெசனல் பதிப்பு

2. கூகிள் ஏர்த் பிளஸ் பதிப்பு.

3. கூகிள் ஏர்த் இலவச பதிப்பு

இவற்றில் கூகிள் ஏர்த் இலவச பதிப்பினை பதிவிறக்கி இங்கே சென்று பதிவிறக்கி கொள்ளலாம்.

http://earth.google.com/

இலவச பதிப்பையும் விட தெளிவாக பார்ப்பதானால்; கூகிள் ஏர்த் பிளஸ் US$ 20 க்கும், கூகிள் ஏர்த் புரோபெசனல் US$ 400 க்கும் பெற்றுக்கொள்ளலாம்.

கூகிள் ஏர்த் புரொபெசனலை 7 நாட்களுக்கு பரீட்சார்த்தமாக தருகிறார்கள். அதை பதிவிறக்கி பயன்படுத்திப் பார்க்க விரும்புவோர் கீழுள்ள இணைப்பை சொடுக்கி செல்லுங்கள்.

http://earth.google.com/earth_pro.html

புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் “கூகிள் ஏர்த் 4.2” யில் செய்மதியூடாக விண்வெளியையும் பார்க்கக் கூடியதாக உள்ளது.

அதன் விளம்பரக் காணொளி


Download As PDF

தமிழ் யுனிகோட் பதிவிறக்கி பயன் படுத்துவது எப்படி?

தமிழ் எழுத்துருக்கள் எத்தனையோ பயன் படுத்தப்பட்டு வந்தன. அவை எல்லாவற்றிலும் ஏதோ ஒரு குறைபாடு இருந்தே வந்துள்ளது. ஆனால் தற்போது மிகவும் சிறப்புடன் செயல்படும் ஒரு சிறந்த எழுத்துரு மென்பொருளாக "ஈ-கலப்பை தமிழ் யுனிகோட்" எழுத்துருவை சொல்லலாம். ஒரே நேரத்தில் தமிழிழும் ஆங்கிலத்திலும் மாறிமாறி தட்டச்சக்கூடியது. இது மிகவும் இலகுவானதும், தற்போது அதிகமானோரால் பாவிக்கப்படுவதும் ஆகும். இந்த வலைப்பதிவு கூட தமிழ் யுனிகோட் எழுத்துரு கொண்டே எழுதப்பட்டுள்ளது.

இந்த "தமிழ் யுனிகோட்" எழுத்துருவை உங்கள் கணனிகளில் பயன்படுத்துவதற்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மீயிணைப்பை அழுத்தி பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.

http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3

இதை எவ்வாறு உங்கள் கணனிகளில் பதிவிறக்கி பயன்படுத்துவது என்பதை அறிந்துக்கொள்ள விரும்புவோர்; கீழுள்ள தளத்திற்குச் செல்லுங்கள். மிக இலகுவான செயல்முறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

http://www.thozhi.com/tamiltyping.htm

தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்வது என பயிற்சி பெற விரும்புவோர் கீழுள்ள தளத்திற்கு செல்லலாம்.

http://ezilnila.com/tane/unicode_Writer.htm

யுனிகோட் என்றால் என்ன? அது கணனியில் எவ்வாறு இயங்குகின்றது போன்றவற்றை கற்க விரும்புவோர் கீழுள்ள தளத்தில் கற்றுக்கொள்ளலாம். மிகவும் அருமையான விளக்கத்துடன் சுரதா யாழ்வாணன் அவர்கள் காணொளி ஊடாக கற்றுத் தருகின்றார்.

http://www.suratha.com/tamilunicode.html

Download As PDF