Monday, December 17, 2007

மாற்று வழியில் மின்னஞ்சல் அனுப்புவோமா?

நீங்கள் வழமையாக உங்கள் மின்னஞ்சல் சேவையை பயன்படுத்துவதற்கு; உங்கள் பயனர் பெயர், கடவுச் சொல் போன்றவற்றை இட்டு உங்கள் மின்னஞ்சலை திறந்து அதன் பின்பே அவசியமானவர்க்கு மின்னஞ்சல் அனுப்புவீர்கள். ஆனால் அவ்வாறு இல்லாமல் வேறு ஒரு வழியிலும் மின்னஞ்சல் அனுப்ப முடியும்.

வித்தியாசமாக அதுவும் ஆங்கில கூட்டெழுத்துக்களில். எப்படி என்று முயன்று பாருங்கோவன். அதுவும் இத்தளத்தில் இருந்தே அனுப்பலாம்.

கீழே இணைக்கப்பட்டிருக்கும் படத்தைப் பாருங்கள். உண்மையில் அது படமல்ல. அதுதான் மாற்றுவழி மின்னஞ்சல். அதன்மேல் சொடுக்கியை வைத்து சுட்டி தட்டச்சிடலாம்.

எப்படி?

To: - சென்றடைய வேண்டியவரின் மின்னஞ்சல் முகவரியை இடுங்கள்

From: - அனுப்புவரின் மின்னஞ்சல் முகவரியை (உங்கள்) இடுங்கள்

Name: - அனுப்புவரின் பெயர்

Subject: - நீங்கள் எழுதப்போகும் விசயத்தின் தலைப்பு

Message: - நீங்கள் எழுதவேண்டியத் தகவலை எழுவதற்கான இடம்.

இனி தகவலை எழுதி முடிந்தவுடன் "Send" எனக் காணப்படும் இடத்தில் ஒரு சொடுக்கு போடுங்கள் அவ்வளவு தான்.

மின்னஞ்சல் உரியவருக்குச் சென்றடைந்து விடும்.



குறிப்பு:

"From" எனும் இடத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை இடாமல், வேறு ஒருவரின் முகவரியை இட்டும் அனுப்பலாம். வேண்டுமானால் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரியைக் கூட இடலாம். மின்னஞ்சலை பெற்றவர் குழம்பிப்போய்விடவும் வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் குழப்பத்தை தவிர்ப்பதற்கு உங்கள் மின்னஞ்சலை மட்டும் பயன்படுத்தி அனுப்புங்கள்.

இனிமையான மாற்று வழி மின்னஞ்சல் அனுப்புதலுக்கு வாழ்த்துக்கள்!

நன்றி

அன்புடன் அருண்
HK Arun

Download As PDF

7 comments:

செல்வம் said...

மின்னஞ்சல் அனுப்ப எளிதான வழியாக இருந்தது.பயனான பதிவு. தொடரட்டும் உங்கள் சேவை.வழ்த்துகள்.

கோபாலகிருஷ்ணன் சு. said...

ஆஹா, ஆஹா, என்ன அருமையான பதிவு. ஏதோ 18-ம் நூற்றாண்டில் எழுதி அனுப்பியது போன்ற நல்லுணர்வு. மின்னஞ்சல் பெற்றுக் கொண்டவர்களுக்கெல்லாம் வியப்பு. அவர்களுக்கும் உங்கள் தள முகவரியைத் தந்துள்ளேன்.

இதை, வரி வடிவத்தில் (டெக்ஸ் சாட்)ல், சாட்டிங்கில் அனுப்ப இயலுமா என்பதைத் தெரியப் படுத்தவும். மேலும், தமிழில் இவ்வாறு எழுத முடியுமா என்று தெரிவிக்கவும்.

வா.....ழ்க உங்கள் நற்பணி,
வளர்க உங்கள் தமிழ்த் தொண்டு.

புத்தாண்டில் அனைத்தும் பெற்று மன அமைதி, உடல் நலம் பெற, மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கோபாலகிருஷ்ணன் சு.
31 12 2009

Anonymous said...

வணக்கம். இந்த செய்தியை திரு முத்துக்குமார் அவர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நான் பி.கே.பி. தளத்தின் வாயிலாகத் தெரியப் படுத்தியுள்ளேன்.

ஒரு சிறிய வேண்டுகோள். அந்த எழுத்துக்கள், மின்னஞ்சல் சேர்ந்த இடத்தில், அந்த் மடல் காலியாகவும், அதற்க்குக் கீழே செய்தியாக வருகிறது. கட்டத்துக்குள் வர என்ன செய்ய வேண்டும்.

மேலும், அதே வரிவடிவத்தில் (style) வலை உரையாடலில் அனுப்ப இயலுமா, என்பதையும், மற்றும், தமிழில் இவ்வாறு எழுத இயலுமா என்பதையும் தெரிந்து கொள்ள ஆவலுடன் உங்கள் ம்டலை இதே தளத்தில் எதிர்பார்க்கிறேன். மிக, மிக் நன்றி

என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

வா.......ழ்க வளமுடன்,
கோபாலகிருஷ்ணன் சு.
02 01 2010

கோபாலகிருஷ்ணன் சு. said...

அன்புடையீர், வணக்கம். 02.01.2010 அன்று நான் அந்த மின்னஞ்சலை அந்த பழங்காலத் தாள் போன்ற கட்டத்திற்குள் வருமாறு எப்படி அனுப்புவது என்று கேட்டிருந்தேன். தயவு செய்து விரைவில் விளக்கம் அனுப்பவும். நன்றி,

கோபாலகிருஷ்ணன் சு.
12.01,2010

HK Arun said...

உடனடியாக பதிலளிக்காமைக்கு மன்னிக்கவும்.

//அந்த மின்னஞ்சலை அந்த பழங்காலத் தாள் போன்ற கட்டத்திற்குள் வருமாறு எப்படி அனுப்புவது என்று கேட்டிருந்தேன்.//

அவ்வாறு அனுப்ப முடியாது. இது விளையாட்டாக மின்னஞ்சல் அனுப்பும் ஒரு முறை மட்டுமே.

அதேவேளை அனுப்புபவர் (from) எனும் இடத்தில் வேறு ஒரு நபரின் மின்னஞ்சலை இட்டும் அனுப்பலாம்.

நன்றி

Anonymous said...

திரு அருண் அவர்களுக்கு, தங்கள் மடல் கண்டேன். விளக்கம் கண்டு, மிக்க மகிழ்ச்சி.

தமிழில் இவ்வாறு அனுப்ப இயலுமா என்றும், தமிழில் சாய்வெழுத்தில், அனுப்ப இயலுமா என்பதைத் தெரியப்படுத்தவும்

ஆர்வத்துடன், புது வழிகளைக் காணும் தங்கள் முயற்சி வளர்ந்து
எங்களுக்கெலாம் பயன் அளிக்கட்டும்.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

வா..........ழ்க வளமுடன்.

கோபாலகிருஷ்ணன்,
14.01.2010
7.48 காலை, இ.நி.நே.

கவிதை காதலன் said...

சூப்பர்.. சூப்பர்..