Monday, December 3, 2007

தமிழ் யுனிகோட் பதிவிறக்கி பயன் படுத்துவது எப்படி?

தமிழ் எழுத்துருக்கள் எத்தனையோ பயன் படுத்தப்பட்டு வந்தன. அவை எல்லாவற்றிலும் ஏதோ ஒரு குறைபாடு இருந்தே வந்துள்ளது. ஆனால் தற்போது மிகவும் சிறப்புடன் செயல்படும் ஒரு சிறந்த எழுத்துரு மென்பொருளாக "ஈ-கலப்பை தமிழ் யுனிகோட்" எழுத்துருவை சொல்லலாம். ஒரே நேரத்தில் தமிழிழும் ஆங்கிலத்திலும் மாறிமாறி தட்டச்சக்கூடியது. இது மிகவும் இலகுவானதும், தற்போது அதிகமானோரால் பாவிக்கப்படுவதும் ஆகும். இந்த வலைப்பதிவு கூட தமிழ் யுனிகோட் எழுத்துரு கொண்டே எழுதப்பட்டுள்ளது.

இந்த "தமிழ் யுனிகோட்" எழுத்துருவை உங்கள் கணனிகளில் பயன்படுத்துவதற்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மீயிணைப்பை அழுத்தி பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.

http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3

இதை எவ்வாறு உங்கள் கணனிகளில் பதிவிறக்கி பயன்படுத்துவது என்பதை அறிந்துக்கொள்ள விரும்புவோர்; கீழுள்ள தளத்திற்குச் செல்லுங்கள். மிக இலகுவான செயல்முறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

http://www.thozhi.com/tamiltyping.htm

தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்வது என பயிற்சி பெற விரும்புவோர் கீழுள்ள தளத்திற்கு செல்லலாம்.

http://ezilnila.com/tane/unicode_Writer.htm

யுனிகோட் என்றால் என்ன? அது கணனியில் எவ்வாறு இயங்குகின்றது போன்றவற்றை கற்க விரும்புவோர் கீழுள்ள தளத்தில் கற்றுக்கொள்ளலாம். மிகவும் அருமையான விளக்கத்துடன் சுரதா யாழ்வாணன் அவர்கள் காணொளி ஊடாக கற்றுத் தருகின்றார்.

http://www.suratha.com/tamilunicode.html

Download As PDF

4 comments:

செல்வம் said...

தகவலுக்கு நன்றி.நீங்கள் கூறியுள்ளபடி http://www.thozhi.com/tamiltyping.htm சென்றேன்.அதில் zip-unzip என்கிறார்கள்.அப்படியென்றால் என்ன?அதை எவ்வாறு செய்வது என்று விளக்குவீர்களா?நான் இப்பொழுது www.tamileditor.org இந்த வலதளத்திலிருந்து எழுதி ஒட்டிவருகிறேன்.உங்கள் பதிலை விரைவாக எதிர்பார்க்கிறேன்.

HK Arun said...

இந்த http://www.ezilnila.com/uni_kadduraikal.htm தளத்திலிருந்து தமிழ் யுனிகோட்டை உங்கள் கணனிக்கு பதிவிறக்கி ரன் செய்யுங்கள்.

பின் Alt + 2 அழுத்தினால் "system tray" யில் "K" எழுத்து மாறி "அ" தெரியும். அவ்வளவு தான் தமிழில் எழுதத் தொடங்குங்கள்.

செல்வம் said...

நீங்கள் கூறியுள்ளபடி செய்தேன்.இப்பொழுது எளிதாக தமிழில் எழுத முடிகிறது.நன்றி.

Anonymous said...

நான் யுனிகொட் தமிழ் 99 மற்றும் டி.எஸ்.சி, டி.எஸ்.சி பரனர் போன்றவற்றை டவ்ன் லொடு செய்திருக்கிறன். எனக்கு டமில் 99 பர்மட் மந்தில் பதியவில்லை. அம்மா என்று ஆங்கிலத்தில் அடித்தால் அது தமிழில் அம்ம என்ரு அடிக்குமாரு செய்ய என்ன செய்ய வேன்டும்.
arasu