எமது கணனிகள் இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் போது அதன் செயற்திறன் வெகுவாக குறைவது அல்லது பாதிப்பதற்கான காரணம் Virus, Adware, Spyware போன்ற தீய மென்பொருற்களின் செயல்பாடுகளே ஆகும். அதன் ஒவ்வொன்றினதும் தனிப்பட்ட குணயியல்புகளை பார்ப்போம்.
Spyware - என்பது நமது அனுமதியை பெற்று அல்லது பெறாமல் நம்மையறியாமலேயே நமது கணினியின் தகவல்களைப் பெற்று நமது கணனியின் பாவனை மற்றும் தகவல்களை வேறொரு குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்பிக்கொண்டிருப்பவைகள் ஆகும்.
Addware - இவை எமது கணனியில் தேவையற்ற ஈ-மெயில்களை ((Spam) உருவாக்குவதுடன், தேவையற்ற பொப்பப்களையும் உருவாக்கி எமது கணனி பாவனையில் இடைஞ்சல்களை ஏற்படுத்துவனவாகும்.
Malware - எனும் மென்பொருற்கள் நமது கணனியிலிருக்கும் முக்கியமான தகவல்களை வேறு ஒரு இடத்திற்கு அனுப்புவதுடன் நமது கணனியிலிருக்கும் memory யை CPU வின் செயல்பாட்டை வேறு தேவைகளிற்காக பயன்படுத்தும். இதனால் நமது கணனியின் செயல்திறன் மிகவும் குறையும். இவை நம்மையறியாமலேயே நமது கணனிகளில் இறங்கக் கூடியவை. குறிப்பாக நாம் இலவசமாக கிடைக்கும் மென்பொருற்களைப் பதிவிறக்கும் போது, இவைகளும் அதனுடன் சேர்ந்து தானாகவே பதிவிறக்கப்பட்டு எமது கணனிகள் மற்ற கணனிகளுடன் தொடர்புக்கொள்ள தாயார் செய்து விடுகின்றன. அத்துடன் நமது browser களும் Hijack பன்னப்படுகின்றன. இதனால் நாம் பாவிக்கும் தளங்கள் அதில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வேறு இடங்களிற்கு அனுப்பபடுகின்றன.
இவற்றை கட்டுப்படுத்திக்கொள்வதற்கு கூகிள் சில இலவச மென்பொருற்களை அறிமுகப்படுத்துகின்றது. அவற்றை கீழுள்ள தளங்களில் இருந்து பதிவிறக்கிக்கொள்ளலாம்.
http://pack.google.com/
http://www.lavasoft.com/
மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் windows update
நாம் வாங்கிய கணனியை பதிவு செய்துக்கொள்வது நல்லது. இதனால் மைக்ரோ சொப்ட் நிறுவனம் நமது கணனியின் பாதுகாப்பிற்கு காலத்திற்குகாலம் இலவசமாக வழங்கி வரும் புதியப்புதிய மென்பொருற்களை பதிவிறக்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கும். அதனை தானியக்க செயல்பாடாக்கிகொண்டால் அதுவாகவே UPDATE ஆக்கிக்கொள்ளும். இதை பதிவிறக்கிக்கொள்வதற்கு நமது ஒபரேடிங் சிஸ்டம் Genuine Microsoft OPS இருக்கவேண்டியது அவசியம். இதனைப் பெற்றுக்கொள்வதற்கு.
http://www.windowsupdate.com/
Sunday, November 18, 2007
தீய மென்பொருற்கள்
Posted by
HK Arun
at
11:24 AM
பகுப்புகள் கூகிள், பயனுள்ளத் தளங்கள், மைக்ரோசொப்ட்
Subscribe to:
Post Comments (Atom)



0 comments:
Post a Comment