Sunday, November 18, 2007

சதுரங்கம் விளையாடுவது எப்படி? (Chess)

சதுரங்கம் விளையாட்டு ஒரு புலமைசார் விளையாட்டாகவே இன்று பார்க்கப்படுகிறது. இவ் விளையாட்டிற்கு முன்னுரிமை கொடுத்து சில பாடசாலைகளில் பயிற்சிகளும் வழங்கப் படுகின்றன. ஒரு காலத்தில் அரசர்களின் விளையாட்டாக இருந்து இன்று அனைத்து மட்டத்தினரதும் ஒரு விருப்பு விளையாட்டாக, பன்னாடுகள் எங்கும் பிரசித்திப் பெற்று விளங்குகின்றது.

ஒரு தட்டையான பலகையில், இடப்பட்டிருக்கும் சதுரங்கப் பெட்டிகளூடாக காய்களை நகர்த்தி விளையாடும் ஒரு விளையாட்டு இது. இரண்டு போர் படைகள் தத்தமது போர் தந்திரோபாயங்களுடன் முன்னோக்கி செல்வது போன்ற ஒரு விளையாட்டு. நாம் கவனக்குறைவாகும் போது எதிரி எம்மை வீழ்த்திவிடுவார். எனவே எச்சரிக்கையுடனும் அறிவுத்திறனுடனும் விளையாட வேண்டும்.

மேலே படத்தில் காண்பது போல் 8 X 8 = 160 சதுரங்கள் இருக்கும். சதுரங்கள் கறுப்பு வெள்ளை நிறங்களில் காணப்படும். இதுவே போர் களமாகும். இரண்டு தரப்பும் எதிரெதிர் முனையில் இருந்து முன்னோக்கி செல்ல வேண்டும். அதில் ஒரு படையணி கறுப்பாகவும் மற்றையப் படையணி வெள்ளையாகவும் இருக்கும். ஒவ்வொரு பக்கமும் 16 - 16 காய்கள் இருக்கும். அவற்றை கீழுள்ளவாறு வகைப்படுத்துவர்.

அரசர் - 1
அரசி - 1
அமைச்சர்கள் - 2
குதிரைகள் - 2
கோட்டைகள் - 2
போர் வீர்ரகள் - 8

இனி இரண்டு படையணியும் களத்தில் போரிட வேண்டியதுதான். இவ்விளையாட்டில் ஒவ்வொரு காய்களையும் எவ்வாறு நகர்த்த வேண்டும். எந்த காயை நகர்த்தினால் என்ன நடக்கும் என மிகவும் எளிதாக இணையக் காணொளி ஊடாகக் கற்றுத்தருகிறார் சுரதா யாழ்வாணன்.

இதோ தளமுகவரி: http://www.jaffnalibrary.com/tools/chess1.html

சுரதா யாழ்வாணன் வழங்கும் மேலும் பல சேவைகள்

இணைய வலையமைப்புக்கள் எவ்வாறு செயல் படுகின்றன, என்பதைப் பற்றிய இணையக் காணொளிப் பாடங்கள்.

http://www.jaffnalibrary.com/tools/ip.html

ஒருங்குறி [யுனிகோட்] என்றால் என்ன? அது கணனியில் எவ்வாறு இயங்குகின்றது?

http://www.suratha.com/tamilunicode.html

"விதை முளைத்தால் மரம் இல்லையேல் உரம்" எனும் மகுட வாசகத்துடன் பல செயலிகளையும் உருவாக்கி தமிழ் இணைய உலகிற்கு அரும்பெரும் பங்காற்றி வருகிறார் சுரதா யாழ்வாணன்.

சுரதா யாழ்வாணன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

நன்றி

அன்புடன்
அருண் HK Arun

Download As PDF

0 comments: