தமிழ்நாடு அரசு முதலாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடசாலை பாட நூல்களை இணையத்தில் மின்நூல்களாக வழங்குகின்றது. இவை PDF கோப்புகளாக உள்ளன. இவை பாடசாலை மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதகம் என்றே கூறவேண்டும்.
இவை PDF கோப்புகளாக இருப்பதால் இவற்றை வாசிப்பதற்கு எடோபி ரீடர் எனும் மென்பொருளை பதிவிறக்கிக் கொள்ளவேண்டும். இங்கே சொடுக்கி பதிவிறக்கிக் கொள்ளலாம்.
பரீட்சை எழுதப்போகும் மாணவர்களுக்கான ஒரு பயனுள்ள தகவலும் உண்டு. அதாவது பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள், கடந்த ஆண்டின் வினாத்தாள்கள் எப்படி இருந்தன, கடினமா? எளிதா? எனும் சிந்தனை அநேகமாக எல்லோருக்குமே தோன்றக் கூடியதே. எனவே அவ்வாறான நிலையில் கடந்த ஆண்டின் வினாத்தாள்கள் எப்படி இருந்திருக்கும் என அறிந்துக்கொள்ளவும், அவற்றை ஒரு முறை மீட்டு தம்மை தயார் படுத்திக்கொள்ளவும் கிடைத்தால் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என சிந்திக்கும் மாணவர்களுக்கு, அவை இதோ இங்கே கிடைக்கின்றன.
இலங்கை மாணவர்கள் தமிழ்நாட்டு பாட நூல்கள் எப்படியிருக்கின்றன என்பதையறிய ஒரு முறை பார்த்துக்கொள்ளலாம்.
http://www.tn.gov.in/dge/question_bank.htm
http://www.tn.gov.in/schoolsyllabus/
நன்றி
அன்புடன்
அருண் HK Arun
Sunday, November 18, 2007
தமிழ் நாடு பாடசாலை பாடப் புத்தகங்கள்
Posted by
HK Arun
at
10:16 AM
பகுப்புகள் PDF கோப்புகள், இணையம், பயனுள்ளத் தளங்கள்
Subscribe to:
Post Comments (Atom)



0 comments:
Post a Comment