நீங்கள் கணனியில் தமிழில் தட்டச்சுப் பயிற்சி பெறவேண்டும் எனும் ஆர்வம் உள்ளவரா? கவலையை விடுங்கள். இன்று எத்தனையோ இணையத்தளங்கள் இதற்கான சேவையை வழங்குகின்றன.
கூகிள் தரும் தமிழ் யுனிக்கோட் விசைப்பலகை.
ஆம்! கூகிள் நிறுவனமே நமக்கோர் தமிழ் யுனிகோட் விசைப்பலகையை தந்து உதவுகின்றது. இதில் தட்டச்சு செய்வது மிகவும் இலகுவானது. ஆங்கில எழுத்துக்களை தட்டச்சு செய்துவிட்டு 'Space Bar' ரை தட்டினால், நாம் தட்டிய ஆங்கில எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களாக காட்சித்தரும்.
கீழே சொடுக்கி பயிற்சித்துப் பாருங்கள்.
http://www.google.com/transliterate/indic/Tamil
சுரதா யாழ்வாணன் வழங்கும் ஒருங்குறி எழுதி
இது சுரதா யாழ்வாணன் வழங்கும் ஒருங்குறி எழுதி. மிகவும் எளிதாக எழுதிப் பயிற்சிப் பெறக்கூடியது. இதில் பல்வேறு தமிழ் எழுத்துருக்களில் தட்டச்சிட்டு பழகலாம். பாமினி, தமிங்கிலிஸ், அமுதம், டாம் போன்ற எழுத்துருக்கள் உள்ளன. விரும்பும் எழுத்துருவை தெரிவு செய்து எழுதிப்பழகலாம்.
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
எழில்நிலா' தரும் தமிழ் ஒருங்குறி விசைப்பலகை
எழில்நிலா இணையத்தளத்திலும் ஒரு [Tamil Unicode type writer] தமிழ் ஒருங்குறி விசைப்பலகை பொருத்தப்பட்டுள்ளது. மேலிருக்கும் பெட்டியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் போதே, கீழிருக்கும் பெட்டியில் தமிழ் எழுத்துக்கள் தெரிய ஆரம்பித்து விடுகின்றன. இத்தளம் ஒரு ஆரம்ப தமிழ் தட்டச்சுப் பயிற்சியாளருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
http://ezilnila.com/nila/unicode_writer.htm
இவற்றையும் பரீட்சித்து பாருங்கோவன்.
http://www.higopi.com/ucedit/Tamil.html
என்னத்தான் இணைய உலகில் கணனி வல்லுநர்கள் கோலோச்சினாலும், புதிதாய் கணினி உலகிற்கு வருவோருக்கு, தமிழ் எழுத்துருவில் தட்டச்சுப் பயிற்சி என்பது மிக மிக அத்தியாவசியமான ஒன்று. தமிழ் தட்டச்சுப் பயிற்சி பெறும் எதிர்கால தமிழ் சந்ததியினரால் தான் தமிழ் மொழியின் வளர்ச்சியை மென்மேலும் இணைய உலகில் முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.
எமது வலைப்பதிவின் (Footer) அடிப்பாகத்திலும் தமிழ்99 விசைப்பலகை பொருத்தப்பட்டுள்ளது. இது மிகவும் இலகுவானது. தட்டச்சுப் பலகையில் எழுத்துக்கள் தமிழிலேயே காணப்படுவதால் எவ்வித சிரமும் இன்றி எளிதாக தட்டச்சிடலாம்.
தமிழின் வளர்ச்சி கருதி தமிழ் ஒருங்குறி எழுதிகளை உருவாக்கி இணையத்தில் இலவசப் பயன்பாட்டிற்கு விட்டிருக்கும் தமிழ் நல்லுல்லங்கள் அனைவருக்கும் நன்றி. கூகிள் நிறுவனத்தினருக்கும் நன்றி
நன்றி
அன்புடன்
அருண் HK Arun
Sunday, November 18, 2007
தமிழ் ஒருங்குறி தட்டச்சுப் பயிற்சி
Posted by
HK Arun
at
10:18 AM
பகுப்புகள் இணையம், கூகிள், தமிழ் எழுத்துரு, தமிழ் தட்டச்சுப்பலகை, பயனுள்ளத் தளங்கள்
Subscribe to:
Post Comments (Atom)



0 comments:
Post a Comment