Sunday, November 18, 2007

இணையத்தில் தமிழ் மின்னூல்கள்

ஈழத்து மின்னூல்கள்

ஈழத்து எழுத்தாவணங்களை அடுத்த தலைமுறையினரின் பயன்பாட்டிற்கு கிடைக்கக் கூடியதாக எடுத்துச்செல்ல வேண்டும் எனும் நோக்கில், தன்னார்வலர்களின் கூட்டுழைப்பால், ஈழத்து நூல்கள் மின்னூல்களாக (E- Book) "நூலகம்" தளத்தில் பதிவேற்றி வைக்கப்படுகின்றன.

இவற்றை இணையத்திலிருந்து உங்கள் கணனிகளுக்கு பதிவிறக்கி வாசித்து பயனடையலாம். இவை PDF கோப்புகளாக உள்ளன. இவற்றை கணனிகளில் பதிவிறக்கிக்கொண்டால் நேரம் கிடைக்கும் போது ஆறுதலாக வாசித்துக்கொள்ளலாம்.

http://www.noolaham.net/library/books.htm

இது நூலகம் பங்களிப்பாளர்களின் கூகிள் குழும முகவரி:

http://groups.google.com/group/noolaham

ஈழத்துப் படைப்புக்கள் எதுவானாலும் அதன் படைப்பாளி விரும்பி அளிக்கும் பட்சத்தில் அவை நூலகத்தில் சேர்த்துக்கொள்ளப்படும். நீங்கள் விரும்பினால் நூலகத் திட்டத்தில் இணைந்தும் பங்காற்றலாம்.

தமிழ் இலக்கிய மின்னூலகம்

தமிழக தமிழ் இலக்கிய மின்னூல்களை "சென்னை நூலகம்.காம்" இல் பெற்றுக்கொள்ளலாம்.

http://www.chennailibrary.com/

மதுரை இலக்கிய நூல்களை இந்த இணையத்தளத்தில் பார்க்கலாம்.

http://tamil.net/projectmadurai/

தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் திரட்டி, ஒரே இடத்தில் தரும் முயற்சியில் விருபா "இணையதளம்" செயல்படுகிறது. அத்தளத்தில், 20 நாடுகளில் உள்ள, 178 நகரங்களில் வசிக்கும், 956 தமிழ் எழுத்தாளர்கள் எழுதிய, 8 நாடுகளில், 81 நகரங்களில் உள்ள, 394 பதிப்பகங்கள், 100 பிரிவுகளில், வெளியிடப்பட்ட 2099 தமிழ்ப் புத்தகங்களின் தகவல்கள் இதுவரையில் இணைக்கப்பட்டுள்ளதாக அத்தளத்தின் தகவல்கள் கூறுகின்றன.

http://www.viruba.com/default.aspx

Download As PDF

2 comments:

Madhu said...

Search in தமிழ் http://www.yanthram.com/ta/

Arun said...

அன்புடன் மதுசுதன்

அறிவித்தலுக்கு நன்றி.

தங்களது தமிழ் தேடு இயந்திரத்தை அறிமுகப் படுத்தும் நோக்கில் ஒரு பதிவாக போட்டுள்ளேன்.