Sunday, November 18, 2007

இணையத்தில் திருக்குறள் கற்க வேண்டுமா?

இணையத்தில் திருக்குறள் கற்க வேண்டுமா? ஆங்கிலத்தில் கற்கவேண்டுமா? தமிழில் கற்க வேண்டுமா? தமிழ் விளக்கவுரையுடன் கற்கவேண்டுமா? அல்லது தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழியிலும் ஆங்கில விளக்கவுரையுடன் கற்க விரும்புகின்றீர்களா? பிற மொழிகளில் கற்க விரும்புகின்றீர்களா?

எப்படி விரும்புகின்றீர்களோ அப்படியெல்லாம் உங்கள் வசதிகேற்பக் கற்கலாம்.

விரும்பி கற்க விரும்புவோர் எவரும் இருந்தால் அவர்களுக்காவது பரிந்துரைக்கலாம் அல்லவா? இதோ அதற்கானத் தளங்கள்.

திருக்குறள் தமிழில்

http://kural.muthu.org/

திருக்குறள் ஆங்கிலத்தில்

http://nvkashraf.co.cc/nvashraf/kur-eng/closeindex.htm

திருக்குறள் தமிழில் எழுதப்பட்டு அதற்கான விளக்கவுரைகளும் இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இங்கே சொடுக்கிச் செல்லுங்கள்.

இன்னுமொரு சுட்டி:

http://www.thirukkural.com/

திருக்குறள் தமிழில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள தளம். ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் குறள்களுக்கு ஆங்கிலத்திலேயே விளக்கவுரைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

http://acharya.iitm.ac.in/cgi-bin/show_kural_ad.pl?1

இன்றைய புலம்பெயர் தேசங்களில் எமது இரண்டாம் மூன்றாம் தலைமுறையினருக்கு தமிழ் வாசிக்கத் தெரியாமலும் இருக்கும். அவ்வாறான சூழ்நிலையில் திருக்குறள் கற்பிப்பதானால், இதோ இத்தளத்தை பரிந்துரையுங்கள். தமிழிலும், தமிழ் சொற்களை தமிலிங்கிலீஸிலும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆங்கிலத்திலும் ஆங்கில விளக்கவுரையும் உள்ளது.

http://www.shaivam.org/siddhanta/sanga_kural.htm

பன்னாட்டு மொழிகளில் திருக்குறள்

35 பிற மொழிகளில் இத்தளத்தில் திருக்குறளை மொழிமாற்றியுள்ளனர். அதில் அரபி, கொங்கணி, மராத்தி, சவுராத்திரா, லத்தீன், பிரஞ்சு, இந்தி, கன்னடா, ரஸ்யா, ஜப்பனீஸ், சைனீஸ், மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் இங்கே பார்க்கலாம். அல்லது உங்களுக்கு தெரிந்த வேற்று மொழி நண்பர்களுக்கு பரிந்துரைக்கலாம்.

http://nvkashraf.co.cc/nvkashraf/kur-trans/languages.htm

தமிழரான நாம் மதத்தால் இந்து, சைவம், இஸ்லாம், கிருஸ்தவம், பௌத்தம் எதுவாக இருந்தாலும், திருக்குறள் எமக்கான ஒரு பொதுவானதும் சிறப்பானதும் நூலாகும். தமிழரின் வாழ்க்கை வழிக்காட்டியுமாகிய திருக்குறள் தமிழர் எல்லோரும் போற்றத்தக்க ஓர் அருமையான நூலாகும். இந்திய ஜனாதிபதியான அப்துல் கலாம் அவர்கள் திருக்குறள் மீது வைத்திருக்கும் பற்றையும் அதன் சிறப்புக்களையும் எவ்வாறு விவரித்துக் கூறுகிறார் என்று பாருங்கள்.

அப்துல் கலாம் - திருக்குறள் சிறப்புரை

2005 யூலை 8-10 ஆம் நாட்களில் பன்னாட்டு திருக்குறள் மாநாடு அமெரிக்கா வொசிங்டன் நகரில் நடைப்பெற்றது. அதன் சிறப்பாளராக கலந்துக்கொண்ட Dr. A.J.P. அப்துல் கலாம் அவர்கள் ஆற்றிய சிறப்புரையினை கீழே இணைக்கப்பட்டிருக்கும் காணொளியின் ஊடாகக் கேட்கலாம்.



திருக்குறள் ஆங்கிலத்திலும் தமிழிலும் PDF கோப்புகளாக இங்கே பதிவிறக்கிக் கொள்ளலாம்.

நன்றி

அன்புடன்
அருண் HK Arun

Download As PDF

0 comments: