கண்முன்னே நின்று மெஜிக் செய்வதையும், கண்கட்டி வித்தைகள் செய்வதையும் நாம் கண்டுள்ளோம். இணைய நுட்பத் திறன் கொண்டு, இங்கே ஒரு நபர் இணையத்தளத்திலேயே கண்கட்டி வித்தைக் காட்டுகிறார்.
அங்கே ஆறு சீட்டாட்டக் காட்கள் உள்ளன.
அதில் ஒரு காட்டை மட்டும் உங்கள் மனதால் நினைத்துக் கொள்ள வேண்டும்.
அதனை சொடுக்க வேண்டியதில்லை.
தொட வேண்டியதில்லை.
தளத்தில் உள்ள நபர் நீங்கள் நினைத்தக் காட்டை கண்டுப்பிடிப்பார்.
எப்படி?
இரண்டாவது பெட்டியில் அந்நபரது கண்களை நேராகப் பாருங்கள். நினைத்தக் காட்டை நினைத்துக்கொள்ளுங்கள்.
அவருக்கு உங்களைத் தெரியாது.
நீங்கள் எந்த காட்டை நினைத்தீர்கள் என்பதும் அவருக்கு தெரியாது.
ஆனால், அவருக்கு நிச்சயமாகத் தெரியும் நீங்கள் எந்தக் காட்டை நினைத்தீர்கள் என்று.
நான்காவது பெட்டியில்
நீங்கள் நினைத்த காட்டை தவிர மற்றைய காட்டுகள் மட்டும் தெரியும். நீங்கள் நினைத்த காட் மட்டும் மறைந்துவிடும்.
இது எப்படி சாத்தியம்?
இதோ முகவரி அவரது தளத்திற்கு செல்லுங்கள். முடிந்தால் கண்டுப் பிடியுங்கள்.
அப்படியே கண்டுப் பிடித்தால் எனக்கும் கொஞ்சம் அதன் விபரத்தை அறியத் தாருங்கள்.
நன்றி
அன்புடன்
அருண் HK Arun
Sunday, November 18, 2007
இணையக் கண்கட்டி வித்தை
Subscribe to:
Post Comments (Atom)



3 comments:
its simply gr8!!!!!
ஹும்ம்...இதுல கண்கட்டி வித்தையுமில்லை...ஒண்ணுமில்லை.
இப்போ இந்த வித்தையை பாருங்க
R-Red, B-Black
K-King, Q-Queen, J-Jackie
RK♥, BJ♣, BK♠, RQ♦, BQ♣, RJ♦
மேலே இருக்கிறதுல ஏதாவது ஒண்ண நினைச்சுக்குங்க...
.
.
.
.
.
.
.
இப்போ கீழே உள்ள symbol அ 1 நிமிடம் உற்றுப்பாருங்க....
☼
.
.
.
.
.
.
.
.
.
இப்போ கீழே பாருங்க
.
.
.
.
.
.
.
.
.
.
RQ♥, BK♣, RJ♥, BQ♠, RK♦
.
.
.
நீங்க நினைச்சுகிட்ட code காணாம போயிருக்குமே இப்போ?
- Jayakanthan R
- அனானி நண்பரே
உங்கள் பின்னூட்டங்களிற்கு நன்றி.
கண்கட்டி வித்தை என்பதே, நம் கண்ணையே ஏமாற்றும் வித்தை தானே! பலர் ஏமாந்து விடுகின்றனர். சில திறமைசாலிகள் கண்டுப்பிடுத்து விடுகின்றனர்.
நீங்கள் திறமையுடன் கண்டுப்பிடித்து விட்டீர்கள்.
உண்மையில் முதலில் காட்டப்படும் ஆறு காட் களுமே கீழே இல்லை. ஆனால் அதிகமானோர் "தான் நினைத்து காட் மட்டும் எப்படி காணாமல் போனது" என்றே சிந்திப்பர்.
உலக ஏமாற்று வித்தைகள் பலவும் இப்படித்தான் இருக்கின்றது.
நன்றி
Post a Comment